Chat GPT மூலம் ரூ.142,708 கோடி சம்பாதித்தது எப்படி - தொழிலதிபர் சொன்ன ரகசியம்!

இத்துடன் கடந்த ஆண்டில் பிட்காயின் விலை வீழ்ச்சியடைந்ததோடு, ஸ்ட்ராடஜி நிறுவனத்தின் பொதுப் பங்கின் மதிப்பும் சரிந்து, அதன் மதிப்பில் சுமார் 80% இழந்துள்ளது.
Chat GPT மூலம் ரூ.142,708 கோடி சம்பாதித்தது எப்படி - தொழிலதிபர் சொன்ன ரகசியம்!
Chat GPT மூலம் ரூ.142,708 கோடி சம்பாதித்தது எப்படி - தொழிலதிபர் சொன்ன ரகசியம்!
Published on
Updated on
2 min read

அமெரிக்க தொழிலதிபரும், ஸ்ட்ரேடஜி நிறுவனத்தின் நிறுவனருமான மைக்கேல் செய்லர், கடந்த ஆண்டில் ChatGPT மூலம் ரூ.1,42,708 கோடி சம்பாதித்த ரகசியத்தை Diary of a CEO பாட்காஸ்டில் வெளிப்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் கிரிப்டோகரன்சி உலகிலும், கார்ப்பரேட் நிதி மேலாண்மையிலும் மைக்கேல் செய்லர் கவனிக்கப்படும், கற்றுக்கொள்ளப்படும் நபராக உள்ளார்.

"AI செய்யக்கூடிய விஷயங்களை எல்லாம் எப்படிச் செய்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளத் தேவையில்லை. இதுவரை யாருமே செய்யாத விஷயத்தை எப்படி AI-யைச் செய்ய வைப்பது என்பதைத்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்."

"நீங்கள் அபாரமான வெற்றிகளை உருவாக்க விரும்பினால், அதற்கான மாயாஜால வாய்ப்பைக் கண்டறிய வேண்டும்" எனக் கூறியுள்ளார் அவர்.

ஸ்ட்ரேடஜி நிறுவனம், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் பிட்காயின்களை வாங்கிக் குவித்து வருகிறது. இதனால், பிட்காயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து, மைக்கேல் செய்லரின் ரூ.38,000 கோடி சொத்து மதிப்பும் நிலைத்தன்மையின்றி இருந்து வந்தது.

நிறுவனத்தின் மூலதனத்தைப் பெருக்க, 2025-ஆம் ஆண்டு அவர் ChatGPT-யின் உதவியுடன் ‘பெர்பெச்சுவல் பிரிஃபர்டு ஸ்டாக்’ (Perpetual Preferred Stock) என்ற சொத்துக்களை நிர்வகிக்கும் திட்டங்களை உருவாக்கியுள்ளார். இவை அதிகப்படியான ஈவுத்தொகை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

bitcoin
bitcoin

STRK மற்றும் STRF எனப் பெயரிடப்பட்ட இந்தச் சிறப்புப் பங்குகள் மூலம் பெறப்பட்ட முதலீடுகள் முழுமையாகப் பிட்காயின் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இதுவரை, இவ்வாறு முழுவதுமாகப் பிட்காயின் வாங்குவதற்காக எந்த முதலீட்டுத் திட்டமும் உருவாக்கப்படவில்லை என்பதால், வால் ஸ்ட்ரீட் வழக்கறிஞர்களும் வங்கியாளர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இத்துடன், கடந்த ஆண்டில் பிட்காயின் விலை வீழ்ச்சியடைந்ததோடு, ஸ்ட்ராடஜி நிறுவனத்தின் பொதுப் பங்கின் மதிப்பும் சரிந்து, அதன் மதிப்பில் சுமார் 80% இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், மைக்கேல் செய்லர் தனது உத்தியை மாற்றிக்கொள்ளவில்லை. சந்தை மாற்றங்களை எதிர்கொள்ளவும், கடனுக்கான வட்டி மற்றும் பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகையை (Dividend) வழங்கவும், நிறுவனம் சில பிட்காயின்களை விற்பனை செய்துள்ளது.

மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான செயல்பாட்டுச் செலவுகளுக்காகப் பாதுகாப்பாக 4 பில்லியன் டாலர் ரொக்க இருப்பையும் (Cash Reserve) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவை (AI) வெறும் வேலைகளை எளிமையாக்க மட்டும் பயன்படுத்தாமல், நிதியியலில் இதுவரை இல்லாத புதிய நிதி திரட்டும் மாதிரியை உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளார் செய்லர்.

Chat GPT மூலம் ரூ.142,708 கோடி சம்பாதித்தது எப்படி - தொழிலதிபர் சொன்ன ரகசியம்!
India to Russia Direct Train: கண்டங்களைக் கடக்கும் புதினின் ஐடியா பலிக்குமா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com