கருங்கோழி, கருடா ஏர்லைன்ஸ், கஃபே.. தோனி ஸ்டராபெர்ரி விவசாயி மட்டுமில்லை; வாயை பிளக்க வைக்கும் வணிக ராஜ்ஜியம்!

தோனி அவரது சொந்த ஊரான ராஞ்சியில் இயற்கை வேளாண் பண்ணை வைத்திருக்கிறார். இந்த பண்ணையின் அளவு சுமார் 43 முதல் 55 ஏக்கர் இருக்கலாம்.
Beyond Strawberry Farming: MS Dhoni’s Business Empire, Kadaknath Poultry & Investments
கருங்கோழி, கருடா ஏர்லைன்ஸ், கஃபே.. தோனி ஸ்டராபெர்ரி விவசாயி மட்டுமில்லை; வாயை பிளக்க வைக்கும் வணிக ராஜ்ஜியம்!
Published on: 
Updated on: 
3 min read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சமீபத்தில் தனது விவசாயம் செய்யும் அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

"என்னிடம் ஒரு பெரிய நிலம் இருந்தது. ஒருநாள் அதில் விவசாயம் செய்ய விரும்பினேன். கொஞ்சம் ஸ்டராபெர்ரி செடிகள், தண்ணீர் மற்றும் சரியான வானிலை இருந்தால் எல்லாம் சரியாக வளர்ந்துவிடும் என்று எண்ணினேன்.

ஆனால் அதை செயல்படுத்தத் தொடங்கிய போதுதான் அவ்வளவு எளிதான காரியம் இல்லை என கண்டுகொண்டேன். அது கிரிக்கெட் விளையாடுவதை விட கடினமாக இருந்தது.

கிரிக்கெட்டில் சரியான முடிவுகளை எடுப்பதும், விடா முயற்சியும் முக்கியம். ஆனால் விவசாயம் எனக்கு அதைவிட முக்கியமான ஒன்றைக் கற்றுக்கொடுத்தது. அதுதான் பொறுமை" எனப் பேசினார்.

MS dhoni
MS dhoni

உண்மையில் தோனி ஒரு கூல் கேப்டனாக அனைவராலும் விரும்பப்படும் நபராக இருக்க கிரிக்கெட் மட்டுமே காரணம் இல்லை. தோனி என்ற மனிதர் உருவாக அவருக்கு ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களில் ஆர்வம் இருந்ததே காரணம்.

விளையாட்டுகளிலேயே கால்பந்து, பேட்மிண்டன், டென்னிஸ், பேடல்(Padel), கோல்ஃப், மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார்.

எல்லா விளையாட்டுகளும் செதுக்கிய ஒரு வீரர்தானே எல்லோரையும் ஈர்க்கும் நபராக இருக்க முடியும்?

அதேப்போல வருமானம் ஈட்டுவதிலும் தோனி கிரிக்கெட்டிலும் விளம்பரங்களிலும் மட்டுமே கவனம் செலுத்துவது இல்லை.

ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள்..

தோனி அவரது சொந்த ஊரான ராஞ்சியில் இயற்கை வேளாண் பண்ணை வைத்திருக்கிறார். இந்த பண்ணையின் அளவு சுமார் 43 முதல் 55 ஏக்கர் இருக்கலாம் எனக் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் பெரும்பகுதியில் இயற்கை விவசாய முறையில் காய்கறி மற்றும் பழங்கள்

Beyond Strawberry Farming: MS Dhoni’s Business Empire, Kadaknath Poultry & Investments
``வீடியோகேமில் கூட இந்த அதிரடி வராது.." 52 பந்துகள்.. 28 சிக்ஸர்கள்.. 204 ரன்கள்.. 'வைபவ் சூர்யவன்ஷி' உடைத்த உலக சாதனைகள் எத்தனை?

அன்னாசி, மாம்பழம், கொய்யா, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பல்வேறு பழங்களும் தக்காளி, பட்டாணி, ப்ரோக்கோலி, பூசணிக்காய் உள்ளிட்ட காய்களும் மற்றும் பிற பருவகாலப் பயிர்களும் விளைக்கின்றன.

இங்கு ரசாயன உரங்களுக்கு பதிலாக மாட்டு சாணம் அடிப்படையிலான இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் நடைபெறுவதாக அவுட்லுக் வலைத்தளம் தெரிவிக்கின்றது.

ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதனால், சாகுபடி நடந்த சில நேரத்திலேயே பொருட்கள் விற்றுத் தீர்ந்துவிடும் என தோனி கூறியுள்ளார்.

கருங்கோழி

கடக்நாத் என அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா பகுதியைச் சேர்ந்த, தனித்துவமான கருப்பு இறகுகளைக் கொண்ட கோழிகளை தனது பண்ணையில் வளர்த்து வருகிறார் தோனி.

இந்த கோழி இனத்திற்கு 2018-ல் புவியியல் குறியீடு (GI) அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஏப்ரல் 2022-ல், தோனி கொடுத்த ஆர்டருக்காக, ஜாபுவாவில் உள்ள ஒரு கூட்டுறவு நிறுவனம் 2,000 கடக்நாத் குஞ்சுகளை ராஞ்சி பண்ணைக்கு அனுப்பியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Kadaknath for representation
கருங்கோழி canva

ராஞ்சி சந்தைகளுக்கு பால் சப்ளை!

தோனி தினசரி 4 லிட்டர் பால் குடிப்பார் என்ற வதந்தி இன்றும் சிலரால் நம்பப்படுகிறது. அந்த பால் பண்ணையிலும் அவரது முதலீடு விரிந்துள்ளது.

அவரது பண்ணையில் சாஹிவால், ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் மற்றும் உள்நாட்டு இனத்தைச் சேர்ந்த பசுக்கள் வளர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பண்ணையை பார்த்துக்கொள்ளும் மேலாளர் குணால் கௌரவ், சந்தைகளுக்கு பால் கொண்டு செல்வதை செய்திகள் உறுதிபடுத்துகின்றன. 2021 தகவல் அடிப்படையில் அவரது பண்ணையில் 72 மாடுகள் இருந்துள்ளன.

மற்ற தொழில்கள்

தோனி 'செவன்' என்ற விளையாட்டு ஆடை பிராண்ட் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை நடத்தும் 'ஸ்போர்ட்ஸ்ஃபிட் வேர்ல்ட்' என்ற உடற்பயிற்சி நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர் சென்னை FC, மஹி ரேசிங் டீம் இந்தியா மற்றும் ராஞ்சியில் உள்ள ஹோட்டல் மஹி ரெசிடென்சி ஆகியவற்றையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அவர் முதலீடு செய்த பட்டியலில் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அடங்கும்.

அத்துடன், கருடா ஏரோஸ்பேஸ், கடாபுக், கார்ஸ்24, ஹோம்லேன், இமோட்டோராட், ஷாகா ஹாரி மற்றும் 7இங்க்ப்ரூஸ் போன்ற நிறுவனங்களுக்கும் அவரது நிதி உதவிகள் சென்றடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.

2024 பிப்ரவரியில், அவர் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் 1.1% பங்குகளை ரூ. 4 கோடிக்கு வாங்கினார்.

எம்.எஸ். தோனியின் 7Padel விளையாட்டு மற்றும் நலவாழ்வு மையத்தில் கஃபே வசதியும் உள்ளது. சென்னையில் உள்ள நிலையத்தில் சமீபத்தில் விஜய் மற்றும் ராகுல் காந்தி உணவருந்தியது குறிப்பிடத்தக்கது.

தோனி எந்த பொது வெளியிலும் தனது முதலீடுகளை பட்டியலிடவில்லை என்பதால் அவரது வணிக ராஜ்ஜியம் இதை விட பெரிதாகவும் இருக்கலாம். அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.1500 கோடி இருக்கலாம் என ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்திதளம் தெரிவிக்கிறது.

பல துறைகள் மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்தாலும் அவை அனைத்தும் லாபத்தை மட்டுமே சுற்றியில்லாமல் விளையாட்டு மற்றும் சொந்த ஊரான ராஞ்சியை சுற்றி இருப்பதுதான் தோனியின் சிறப்பு!

Beyond Strawberry Farming: MS Dhoni’s Business Empire, Kadaknath Poultry & Investments
``சாதனைகளும் அதிரடியும் அல்ல.. இதுதான் தோனி!" - கடைசி பந்து வரை தோல்வி முடிவாகாது.. டாப் 10 இன்னிங்ஸ் ஒரு விசிட்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.