ஜீரோதாவில் பணத்தைப் போட்டவர்களுக்கு அதிர்ச்சி! - கோடிக் கணக்கில் பணம் இருந்தும் 'லாக்' போட்ட நிறுவனம்! நடந்தது என்ன?

வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது ஏதேனும் தவறுகள் நடக்காமல் இருக்கவும் செய்யப்படும் சாதாரண செயல்பாட்டுச் சோதனைகளின் ஒரு பகுதிதான்
ஜீரோதாவில் பணத்தைப் போட்டவர்களுக்கு அதிர்ச்சி! - கோடிக் கணக்கில் பணம் இருந்தும் 'லாக்' போட்ட நிறுவனம்! நடந்தது என்ன?
Published on
Updated on
2 min read

மும்பையைச் சேர்ந்த முதலீட்டாளரும், ஐ.வி.எஃப் (IVF) நிபுணருமான டாக்டர் அனிருத்தா மல்பாணி என்பவர், பிரபல இணையவழிப் பங்குத் தரகு நிறுவனமான ஜீரோதா (Zerodha) மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். தனது வர்த்தகக் கணக்கில் ₹18 கோடிக்கு மேல் பணம் இருந்தும், அதை முழுவதுமாக எடுக்க நிறுவனம் அனுமதிக்க மறுப்பதாகவும், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ₹5 கோடி மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதை அவர் "ஜீரோதா ஊழல்" என்று பெயரிட்டுப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

மல்பாணி வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான டாக்டர் மல்பாணி, தனது ஜீரோதா கணக்கின் Screenshots-களை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவரது மொத்தக் கணக்கு மதிப்பு நாற்பத்தி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதும், அதில் சுமார் பதினெட்டு கோடி ரூபாய்க்கு மேல் Withdrawable Balance இருப்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஒரு நாளைக்கு ஐந்து கோடி ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்து, தனது பணத்தை இலவசமாகப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டி, ஜீரோதாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நிகில் காமத்தைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, ஜீரோதா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத் விளக்கம் அளித்துள்ளார். அவர், டாக்டர் மல்பாணியின் பணம் எடுப்பதற்கான கோரிக்கைகள் (Payout Requests) ஏற்கப்பட்டு விட்டதாகக் கூறினார். மேலும், ஒரு நாளைக்கு ஐந்து கோடி ரூபாய் என்ற கட்டுப்பாடு என்பது, அமைப்பு ரீதியான சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது ஏதேனும் தவறுகள் நடக்காமல் இருக்கவும் செய்யப்படும் சாதாரண செயல்பாட்டுச் சோதனைகளின் ஒரு பகுதிதான் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

"நீங்கள் நினைத்துப் பார்ப்பதை விட, பணம் எடுக்கும் நடைமுறையில் பல சிக்கல்கள் எழக்கூடும். ஒருமுறைப் பணம் செலுத்தப்பட்ட பிறகு, அதைத் திரும்பப் பெறுவது எங்களுக்குச் சாத்தியமில்லை. எனவேதான், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஒரு Support Ticket கொடுத்து, பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கேட்கிறோம்," என்று நிதின் காமத் விளக்கமளித்தார்.

இந்த நிறுவனக் கொள்கையை நியாயப்படுத்தி, ஒரு வரி ஆலோசகர் பேசுகையில், இது ஒரு ஊழல் இல்லை என்றும், மாறாக, யாரேனும் ஒருவர் ஒரு நாளில் கணக்கில் இருக்கும் மொத்தப் பணத்தையும் திருடிச் செல்வதைத் தடுக்கக்கூடிய ஒரு பாதுகாப்புக் கட்டுப்பாடே இது என்றும் கூறினார். வங்கிகள் மற்றும் யுபிஐ பரிமாற்றங்கள் உட்பட அனைத்து நிதி அமைப்புகளிலும் இத்தகைய வரம்புகள் இருப்பது பாதுகாப்புக்கு அவசியம் என்றும் அவர் வாதிட்டார். ஜீரோதா நிறுவனத்தில், ஒரு நாளில் அதிகபட்சமாக ஐந்து கோடி ரூபாய் வரை எடுக்க முடியும் என்றும், உடனடியாகப் பணம் எடுக்க விரும்பினால், அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என்றும், அதுவும் காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணி வரை மட்டுமே சாத்தியமாகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com