செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை...!

இயற்கை பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.  

சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழக பேரிட மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தகவல் தொடர்பு துறையுடன் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது, இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில் மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com