
அட்டவணை பிரிவுகளுக்கான தேசிய ஆணைய தலைவர் திடீர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்டவணை பிரிவுகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக விஜய் சம்பலா இருந்து வந்தாா். இந்நிலையில் விஜய் சம்பலா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2024 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், அவருக்கு பாஜகவில் அமைப்பு பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனாலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவா் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.