தமிழி எழுத்தில் நாலடியாரை எழுதி சாதனை: சபாநாயகர் வாழ்த்து!

தமிழி எழுத்தில் நாலடியாரை எழுதி சாதனை: சபாநாயகர் வாழ்த்து!
Published on
Updated on
1 min read

நெல்லையில் தமிழி எழுத்துக்களை பயன்படுத்தி நாலடியாரை எழுதி சாதனை படைத்த பள்ளி ஆசிரியரை சபாநாயகர் அப்பாவு பாராட்டி கவுரவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலை பள்ளியில் இடைநிலை 
ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பொன் ரேகா. இவர் தமிழில் தொன்மை மீது கொண்ட பற்று காரணமாக தமிழி மற்றும் வட்ட எழுத்துக்களைக் பயிற்சி பெற்று கொரோனா காலத்தில் தமிழியில் 1,330 திருக்குறள்களை எழுதி உலக சாதனையாக ஜக்கி புத்தகத்தில் உலக பதிவேட்டில் இடம் பிடித்தார்.

திருக்குறள் தொடர்பாக இவரது சாதனை பயணம் கையடக்க திருக்குறள், மூவண்ணத்தில் முப்பால், திருவள்ளுவர் இல்லம், புதிய ஆத்திச்சூடியில் பாரதியார் உருவம், என தொடர்ந்து சாதனை புத்தகங்களில் இடம்பெற்று வருகிறார். இவரது அடுத்த முயற்சியாக திருக்குறளுக்கு இணையான நாலடியாரை தமிழி-யில்  எழுதி அந்நூலை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வெளியிட்டு வாழ்த்து பெற்றார். ஆசிரியை பொன் ரேகாவின்  திறமையை சபாநாயகர் அப்பாவு பாராட்டி கவுரவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com