
ஒரு தந்தை தனது ஏழு வயது மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் ஒரு நகரில் வசித்து வரும் டேவிட் என்பவருக்கும் 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். டேவிட் மற்றும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் அவருடைய மனைவி டேவிட் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையொட்டி இருவருக்கும் இடையே விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
டேவிட் தன்னுடைய மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவரது மகன் அவர் உடனே வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டேவிட் வீட்டிற்கு வந்தவுடன் அவரது மகனை கத்தியால் குத்தி கொலை செய்து அலுமாரியில் பூட்டி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது .மேலும் சம்பவ இடத்தில் இருந்து டேவிட் தப்பித்து சென்றுள்ளார். இதையடுத்து இத்தாலி காவல்துறையினர் டேவிட்டை கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.