பெண்களுக்கான கண்ணியம் மறுக்கப்படுகிறது- ஸ்மிருதி இரானி பேச்சு

சமூக வலைதளங்களில் பெண்களுக்கான கண்ணியம் மறுக்கப்படுவதாக,  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வேதனை தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான கண்ணியம் மறுக்கப்படுகிறது- ஸ்மிருதி இரானி பேச்சு
Published on
Updated on
1 min read

சமூக வலைதளங்களில், அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது.  

இதுதொடர்பாக பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வலைதளங்களில் அனைத்து மத பெண்களின் கண்ணியமும் சீர்குலைக்கப்படுவதாக கூறினார்.

பெண்களுக்கு எதிரான செயலி சார்ந்த வழக்குகளில் போலீசார் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்ததையும் பாராட்டி பேசியிருந்தார்.

அதுமட்டுமல்லாது காவல்துறை மற்றும் நீதித்துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளிக்கொணர்ந்து, நீதிகிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.அதனுடன்  பெண்களுக்கு எதிரான பிரச்னையில், அரசியலை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரினார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com