550 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி...

கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் ஊட்டச்சத்துடன் அடங்கிய சீர்வரிசை என செய்யார் எம்எல்ஏ வழங்கி துவக்கி வைத்தார்.
550 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி...

திருவண்ணாமலை | செய்யாறு மற்றும் அனக்காவூர் வெம்பாக்கம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட சுமார் 550 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை மூலம் சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் செய்யாத சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு காலத்தில் அரசு மருத்துவர்கள் ஆலோசனைகளை பின்பற்றவேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து அரசு வழங்கக்கூடிய கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் சேலை வளையல் அடங்கிய தொகுப்பினை சீர்வரிசையாக வழங்கினார். அதனை தொடர்ந்து செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகா மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பார்வதி சீனிவாசன் உள்ளிட்டோர் கர்ப்பிணி பெண்களுக்கு நலங்கு வைத்து வளையல் சூட்டி ஆரத்தி எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்து வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com