மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி சடலமாக மீட்பு...

மணப்பாறை அருகே ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி சடலமாக மீட்பு...

திருச்சி | மணப்பாறை கால்நடை வாரச்சந்தை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் கழிவு நீர்க்கால்வாயின் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது முகம் அழுகிய நிலையில் உடல் கிடந்தது.

பின்னர் நடத்திய விசாரணையில் இறந்தவர் கோயம்புத்தூர், சிட்கோ,  கொண்டி நகரை சேர்ந்த சுலைமான் (வயது 36) என்பதும் கார்களுக்கு உட்புற டிசைனிங் செய்யும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் நாகூர் அருகே உள்ள வாஞ்சூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றவர், பின் அங்கிருந்து திருச்சிக்கு பொருட்கள் வாங்கி வருவதாக கூறிச்சென்றுள்ளார்.

மீண்டும் வீடு திரும்பாத நிலையில் மர்மமாக இறந்து கிடப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மூன்று நாட்களாக சுலைமான் கால்நடை வாரச் சந்தை பகுதியில் மதுபோதையில் சுற்றித்திரிந்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் இவர் எதற்காக மணப்பாறைக்கு வந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com