விபத்தில் இறந்த நாட்டு வைத்தியர் குடுபத்துக்கு நிவாரண நிதி வழங்க போராட்டம்...

தனியார் மினி பஸ் மோதி, உயிரிழந்த நாட்டு வைத்தியர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இறந்த நாட்டு வைத்தியர் குடுபத்துக்கு நிவாரண நிதி வழங்க போராட்டம்...
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி | சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பகுதியை சேர்ந்தவர் பாலசிங்.இவர் கடந்த 30 வருடமாக நாட்டு வைத்தியராக வேலை இருந்து வருகிறார். இந்த நிலையில் பாலசிங் நேற்று சாயர்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு முதலூரை நோக்கி வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சாத்தான்குளத்தில் இருந்து முதலூர் வழியாக உடன்குடிக்கு செல்லும் ஸ்ரீராம் என்ற தனியார் மினி பேருந்து அதிவேகத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பாலசிங் படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லியும் ஆம்புலன்ஸ் வராததால் திருச்சியில் இருந்து முதலூருக்கு உறவினர் வீட்டுக்கு வந்த இளைஞர்கள் அவரை தங்களது இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்று முதல்வர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்குள்ள மருத்துவர் 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும்,நீங்கள் இருசக்கர வாகனத்தில் தூக்கி வந்துள்ளீர்கள் இங்கு தீவிர சிகிச்சை செய்வதற்கு எந்த வசதிகளும் என்று கூறியதாக அந்த இளைஞர்கள் கூறுகின்றனர். பின்னர் அந்த இளைஞர்கள் விபத்தில் படுகாயமான பாலசிங் என்பவரை இருசக்கர வாகனத்தில் முதலூரில் இருந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் திருநெல்வேலிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த தனியார் மினி பேருந்து மற்றும் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று இரவு விபத்து ஏற்படுத்திய மினி பேருந்து தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் ஓட்டுநர் மாற்றம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை முதலூர் மெயின் பஜாரில் விபத்தில் இறந்து போன பாலசிங் என்பவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இறந்து போன பாலசிங் என்பவர்கள் மகள் கிங்ஸ்லி தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் மற்றும் சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். நேற்று விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் வேறு, காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த ஓட்டுனர் வேறு என்று பொதுமக்கள் சரமாரியாக குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகளையும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com