வேலூர் : தரைப்பாலம் அமைத்திடக் கோரி கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம்...

வேலூர் : தரைப்பாலம் அமைத்திடக் கோரி கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம்...

 வேலூர் மாவட்டம் :

மேல்மொனவூர் அருகேயுள்ள பாலாற்றில் மேல்மொனவூர் - திருமணி பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி சுமார் 8 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் பயனில்லை. இதனால் தற்போது பாலாற்றில் தண்ணீர் வந்த நிலையிலும் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்ட நிலையில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளதால் தமிழக அரசு திருமணி - மேல்மொனவூர் வரையில் தரைப்பாலம் அமைக்க கோரி பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மார்தாண்டம் தலைமையில் பாலாற்றில் தண்ணீரில் இறங்கி கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருமணி, லத்தேரி, கீழ்மொனவூர் ,டிகேபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் சொந்த தொகுதி திருமணி மக்களே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் வேண்டி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com