வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..

வெளியான அதிர்ச்சிகர தகவல் என்ன?
வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..
Published on
Updated on
2 min read

திரைப்படத்தை பார்த்து ரசிக்கும் குழந்தைகள், அதில் கூறப்படும் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்கிறார்களோ இல்லையோ, சமூகத்துக்கும் சரி, தனது வளர்ச்சிக்கும் சரி, தேவையற்றவற்றையே பின்பற்றி வருகின்றனர்.

அவ்வாறு கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஸ்டார் படத்தின் ஒரு காட்சியை கபளீகரம் செய்த சிறுவன் ஒருவன் செய்த சேட்டைதான் இது.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜூன் 13-ம் தேதியன்று பள்ளி நிர்வாகத்தின் இ-மெயில் ஐ.டி.க்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பள்ளி வகுப்பறைகளில் சுமார் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இங்கு வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவே முடியாது என்றும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனியார் பள்ளி நிர்வாக தலைவர் சரவணன் உடனடியாக காட்பாடி காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட மெயில் ஐ.டி.யை பார்த்தனர்.

இதில் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்த மாணவனின் மெயில் ஐ.டி.யில் இருந்து மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை விசாரித்தனர்.

அப்போது சமீபத்தில் ஓ.டி.டி.யில் ஸ்டார் படத்தை பார்த்தாகவும், அதைப் பார்த்துதான் இவ்வாறு மிரட்டல் விடுத்ததாகவும் நடுக்கத்துடன் கூறியிருக்கிறான் அந்த சிறுவன்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கிய நிலையில் இதனால் மாணவனுக்கு விரக்தி உண்டாகியிருக்கிறது. இன்னும் கூடுதலாக விடுமுறை வழங்கியிருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தவர், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளான்.

இதையடுத்து போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை அளிக்கப்பட்டதன் பேரில் சிறுவன் அழுதவாறே மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com