இலங்கையில் முழு ஊரடங்கு எதிரொலி.. "நாளை பள்ளிகள் மூடல்" - கல்வி அமைச்சகம் உத்தரவு
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனையடுத்து, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனிடையே, இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 36 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் வடக்கு,தெற்கு,வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை பள்ளிகளை மூடுமாறு அந்நாட்டு கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிற மாகாணங்களில் பருவத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மட்டும் அந்தந்த பள்ளிக்கல்விப் பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்று பள்ளிக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஊரடங்கை கண்டித்து அம்மாநில உதிர்கட்சிக எம்பிக்கள் போராட்டத்தில் குதித்தால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.