முதல் ஏஐ ரோபோ - மாணவர்கள் அசத்தல்

செயற்கை நுண்ணறிவு பொருந்திய, 3டி பிரின்டிங் மூலம் 6 அடி உயரத்தில் 40 கிலோ எடையில் மனிதனைப் போல் செயல்படும் ரோபோவை உருவாக்கி உள்ளனர்.
முதல் ஏஐ ரோபோ - மாணவர்கள் அசத்தல்

இந்தியாவில் மனித செய்கைகளை கொண்ட முதல் ஏஐ ரோபோவை கோவை கல்லூரி மாணவர்கள் கண்டு பிடித்து அசத்தினர். கோவையில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் இணைந்து மனித செய்கைகளுடன் கூடிய முதல் ஏஐ ரோபோவை முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு பொருந்திய, 3டி பிரின்டிங் மூலம் 6 அடி உயரத்தில் 40 கிலோ எடையில் மனிதனைப் போல் செயல்படும் ரோபோவை உருவாக்கி உள்ளனர். இந்த ரோபோ மனிதர்களைப் போலவே 26 வெவ்வேறு விதமான சைகைகள் மற்றும் அசைவுகளை செய்வதுடன் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com