" மாநிலக் கல்விக் கொள்கை குழுவில் அரசு அதிகாரிகளின் தலையீடு இல்லை " - அமைச்சர் அன்பில் மகேஷ்.

மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு....
" மாநிலக் கல்விக் கொள்கை குழுவில் அரசு அதிகாரிகளின் தலையீடு இல்லை " - அமைச்சர் அன்பில் மகேஷ்.

செப்டம்பர் மாத இறுதிக்குள் மாநில கல்விக் கொள்கை குழு தன்னுடைய இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, நிகழ்காலச் சூழல் மற்றும் எதிர்காலத் தேவைகள் மற்றும் கனவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலத்திற்கென தனித்துவமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையினை வகுக்க தமிழ்நாடு அரசு உறுதிப் பூண்டுள்ளது. 

இதற்கென, மாண்புமிகு நீதியரசர் (ஓய்வு) திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு அமைத்து 01.06.2022 அன்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. 

இந்த உயர்மட்டக் குழுவில்: 
1) . டாக்டர் டி. ஃப்ரீடா ஞானராணி, முதல்வர் (ஓய்வு), காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி, சென்னை.
2) . டாக்டர். ஜி. பழனி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

ஆகிய  இரு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதனையடுயத்து, குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு தரப்பட்டுள்ளதாகவும், அதன்படி குழு 2023 செப்டம்பர் மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 

மேலும், மாநிலக் கல்விக் கொள்கை குழுவில் அரசு அதிகாரிகளின் தலையீடு இல்லை எனவும், குழு முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது என்றும்   கூறினார்.    

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com