விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு WE LOVE OUR TEACHERS என்ற எழுத்து வடிவில் நின்று கைத்தட்டி உலக சாதனைக்காக முயற்சி செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் SBK கலை கல்லூரியைச் சேர்ந்த 5900 மாணவ மாணவிகள் மாணவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக WE LOVE OUR TEACHERS என்ற எழுத்து உருவத்தில் நின்று கைதட்டி ஆசிரியர்களை கௌரவப்படுத்தி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
மாணவ மாணவியர்களின் இந்த சாதனையை முயற்சியை EINSTEIN WORLD RECORD என்ற அமைப்பு அங்கீகரித்து அதற்கான சான்றிதழை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது.