கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
தமிழகத்தில் தக்காளி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தக்காளி விலையும் குறைந்து கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் ஷேர் ஆட்டோவில் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் 4 கிலோ தக்காளி 100 ரூபாய் என வியாபாரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் தக்காளியை அள்ளி செல்கின்றனர்.
இதையும் படிக்க | குழந்தையை கொடுத்து பஸ்ஸில் சீட் பிடித்த தாய்...!