தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவனுக்கு, 112 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம், 43 ஆயிரத்து, 840 ரூபாய்க்கும், கிராமுக்கு, 14 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம், 5 ஆயிரத்து, 480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று, வெள்ளியின் விலையும் அதிகரித்தள்ளது. கிராமுக்கு, ஒரு ரூபாய் 50 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி, 80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.