Madhavan: 17.5 கோடி வீடு; ஆனால் ஆடம்பரம் இல்லை - மும்பை வீட்டின் ஹைலைட்ஸ்!

வீட்டின் உள்ளே நுழைந்தால் புத்தரின் சிலைகள், பூஜை அறை, புத்தகங்கள் நிறைந்த நூலகம் என மன அமைதிக்கு முன்னுரிமை கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது.
Madhavan
Madhavaninsta
Published on
Updated on
2 min read

"என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டைப் பார், என்னைப் பிடிக்கும்" எனப் பாடியது சூர்யாவாக இருந்தாலும், அதற்குப் பொருத்தமான வீட்டில் வசிக்கிறார் நடிகர் மாதவன். மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் (BKC) பகுதியில் இருக்கும் அவரது வீட்டின் மதிப்பு ரூ.17.5 கோடி என்கிறது ஆசியநெட் தளம். அப்படி என்ன சிறப்பு அவர் வீட்டில்?

வெறும் ஆடம்பரமான கட்டடமாக இல்லாமல், மாதவன் நிறைவான வாழ்வனுபவத்தைப் பெறுவதற்கான குடிலாக தியான அறை, நூலகம், இயற்கையை ரசிக்க ஹைட்ரோபோனிக் மாடித் தோட்டம் ஆகியவற்றுடன் இந்த வீட்டைக் கட்டியுள்ளார்.

நவீன நகர்ப்புறத்தின் சத்தங்களுக்கு நடுவே, தனித்துவமான கற்கள் மற்றும் மர வேலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வசதியுடன் சமநிலையையும் வழங்கும் இடமாக மாதவனின் வீடு திகழ்கிறது.

சுமார் 4,182 சதுர அடியில் பரந்து விரிந்துள்ள இந்த வீட்டில், 5 படுக்கையறைகள், பிரத்யேக கார் பார்க்கிங் வசதி என ஒரு சொகுசு வீட்டிற்குரிய அனைத்து அம்சங்களும் உள்ளன.

ஆனால், வீட்டின் உள்ளே நுழைந்தால் புத்தரின் சிலைகள், பூஜை அறை, புத்தகங்கள் நிறைந்த நூலகம் என மன அமைதிக்கு முன்னுரிமை கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் உண்மையான 'ஹைலைட்' அதன் மாடியில்தான் இருக்கிறது. சுற்றிலும் கான்கிரீட் கட்டடங்கள் நிறைந்த மும்பை மாநகரத்தின் நடுவே, தனது மாடியில் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics - மண் இல்லாமல் தண்ணீர் மூலம் செடிகளை வளர்க்கும் முறை) தொழில்நுட்பத்தில் ஒரு பசுமைத் தோட்டத்தையே உருவாக்கியுள்ளார் மாதவன்.

அங்கே அவரே தனது கையால் காய்கறிகளையும் பழங்களையும் வளர்த்து வருகிறார். இயற்கை மற்றும் நிலையான வாழ்வியல் (Sustainable Living) மீதான அவரது ஆர்வத்தை இது வெளிப்படுத்துகிறது. மாடித் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலும், வசதியான இருக்கைகளும் மாலையில் ஓய்வெடுக்க ஒரு சொர்க்கபுரியாக மாறியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com