“வழக்கத்தை விட அதிகமாவே இருக்கும்” - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் நாடு முழுதும் 106% பதிவாக கூடும்.
south west monsoon 2025
south west monsoon 2025
Published on
Updated on
1 min read

தமிழகம் மற்றும் கேரளாவில் பருவ மழை தொடங்கிவிட்டது. வழக்கத்திற்கு மறக்க இந்த ஆண்டு வெப்ப அலை தாக்குவதற்கு முன்பாகவே கோடை மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே கனமழை - மிக கனமழை பெய்துவருகிறது. 

கேரளாவிலும் 8 நாட்களுக்கு முன்பே தொடங்கிய மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. தீவிர மழையால் நேற்று 11 மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை குறித்து தகவல் அளித்த இந்திய வானிலை ஆய்வு மையம் 

“தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் நாடு முழுதும் 106% பதிவாக கூடும்.

வடகிழக்கு இந்தியாவில் இயல்பிற்கு குறைவான மழையும், வடமேற்கு இந்தியாவில் இயல்பான மழையும், மத்திய மற்றும் தென் இந்தியாவில் இயல்பிற்கு அதிகமான மழையும் பதிவாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் இயல்பிற்கு அதிகமான மழையும், தென் மாவட்டங்களில் இயல்பான மழையும் பதிவாகும். ( கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இயல்பிற்கு குறைவான மழை பதிவாகும் என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது மாற்றம்) என கூறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com