“ எக்காரணம் கொண்டும் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது ; காவல்துறையினர் பாரபட்சம் பார்க்கக்கூடாது” - விக்ரமராஜா

“ எக்காரணம் கொண்டும் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது ; காவல்துறையினர் பாரபட்சம் பார்க்கக்கூடாது” -  விக்ரமராஜா

தென்காசி - நெல்லை நான்கு வழிச் சாலையில் எக்காரணம் கொண்டும் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என்று சுரண்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் சுரண்டையில் புதிதாக ரத்னா சில்க்ஸ் ஜவுளி ஷோரூம்  திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,  செய்தியாளர்களிடம் பேட்டியின் போது  விக்கிரமராஜா கூறியதாவது:-

 “வளர்ந்து வரும் நகரங்களில் சுரண்டை பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது.  தென்காசியில் இருந்து நெல்லைக்கு நான்கு வழிச்சாலை திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 4 வழிச் சாலையில்  டோல்கேட் அமைப்பதற்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த பகுதியில் கண்டிப்பாக டோல் கேட் அமைக்கக் கூடாது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வணிகர்கள் சங்கத்தின் சார்பாக வருகிற 14 -ம் தேதி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

தற்பொழுது சாலைகளில் இருபுறமும் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.  இந்த விரிவாக்க பணி மூலமாக பொதுமக்கள் சிரமம் அடைகிறார்கள்.  இதை போக்குவரத்து  காவல் துறை மூலமாக பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறுகள் இல்லாமல் சரி செய்து வெகு சீக்கிரமாக இந்த பணியை முடிக்க வேண்டும்.

வருகிற மாதங்களில் அதிகப்படியான பண்டிகை காலங்கள் உள்ளதாலும்,  மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பதற்கு காவல்துறையினரும், தீயணைப்பு துறையினர் லைசன்ஸ் வழங்குவதற்கு எந்தவிதமான பாரபட்சமின்றி வழங்கி பண்டிகையை காலங்களில் பொதுமக்கள் சந்தோசமாக கழிக்க வணிக சங்கத்தின் சார்பாக   கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com