
உத்தரபிரதேசத்தில் பொதுக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் முன்னிலையில் பாஜக எம்.எல்.ஏ-வை விவசாயி ஒருவர் பளார் என அறையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி உத்தரபிரதேசத்தில் பொதுக்கூட்டங்களும் பிரச்சாரங்களும் களை கட்டியுள்ளன. அவ்வாறு பொதுக்கூட்டம் ஒன்றில் ஏராளமான மக்கள் முன்னிலையில் விவசாயி ஒருவர் பொதுக்கூட்ட மேடையின் மீது ஏறி வந்து உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தாவை பளார் என கன்னத்தில் அறைந்தார்.
இது கூட்டத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்ப வீடியோவானது இணையத்தில் வைரலானது. இச்சம்பவம் நடைபெற்று இரு தினங்களில் மற்றொரு வீடியோ இணையத்தில் வெளியானது.
அதில் விவசாயி தான் பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தாவிடம் அன்புடன் கையை அசைத்ததாகவும், ஏதேச்சையாக கை அவரை அறைந்துவிட்டதாகவும் விவசாயி விளக்குவது போல் உள்ளது. இந்த வீடியோவில் பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா-வும் அருகில் இருக்கிறார்.