பெண்களின் அரைநிர்வாணம் ஆபாசம் கிடையாது

பெண்களின் அரைநிர்வாணம் ஆபாசம் கிடையாது
Published on
Updated on
1 min read

பெண்களின் அரைநிர்வாணம் ஆபாசம் கிடையாது என்று கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா ஃபாத்திமா, தனது நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவற்றை ரத்து செய்யக்கோரி ரெஹானா மனுத்தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கவுசர், ஆண்கள் சட்டை அணியாதது ஆபாசமாக பார்க்கப்படாததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி.

பெண்களின் அரைநிர்வாணம் எப்போதுமே கவர்ச்சி, ஆபாசம் ஆகாது என்று தெரிவித்தார். மேலும், ஒரு பெண் தனது உடல் குறித்து எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் அனைத்தும் அவர்களது உரிமை சார்ந்தது என்றும் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com