புதுச்சேரியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி...சாலையில் குவிந்த பொதுமக்கள்!

புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடினர்.

ஞாயிறுதோறும் சென்னையில் தொடங்கிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடர்ந்து கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி இசைக்கு தகுந்தவாறு உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர். 

இந்நிகழ்ச்சியில் மல்லர் கம்பம், பறை இசை, குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரை சாலையில் குவிந்ததால் அசாம்பாவிதங்களை தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com