போதைப்பொருள் வழக்கில் நடிகை அனன்யா பாண்டே சிக்கியது எப்படி ? 

போதை பொருள் வழக்கில் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் நடிகை அனன்யா பாண்டே சிக்கியது எப்படி ? 
Published on
Updated on
1 min read

போதைப்பொருள்  தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷாருக்கான் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோரின் குடியிருப்புகளுக்கு இன்று சென்று சோதனை நடத்தினர்.

ஷாருக்கான்  வீட்டில் சோதனை என்றவுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது; பிறகு அவர் வீட்டில்  சோதனை இல்லை ஆவணங்கள் சரிபார்க்க சென்றிருந்தோம் என  என்.சி.பி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் இதுவரை குறிப்பிடப்படாதா பாலிவுட் நடிகை வீட்டில் ஏன்? சோதனை நடத்தினர் என கேள்விகள் எழுந்தது. 

என்சிபி அதிகாரிகள் இன்று காலை அனன்யா பாண்டேயின் இல்லத்திற்கு வந்த பிறகு நடிகையின் பெயர் சமூக ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது.  

கப்பலில் கைது செய்யப்பட்ட 20 பேரில் சிலருடன் அனன்யா பாண்டே வாட்ஸ் ஆப்பில் இருந்து, போதை பொருட்கள் குறித்தும், அதை வாங்குவது குறித்தும் பேசி இருக்கிறார். இதனால் தான்  இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.  

ஆர்யன் கான், அனன்யா பாண்டே இருவரும் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com