உத்தரவாதம் என்ற பெயரில் பொய்கூறும் காங்கிரஸ்...தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் உரை!

உத்தரவாதம் என்ற பெயரில் பொய்கூறும் காங்கிரஸ்...தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் உரை!

உத்தரவாதம் என்ற பெயரில் காங்கிரஸ் பொய் கூறி வருவதாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் வரும் மே 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளித்த நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் மட்டும் கோடீஸ்வரர்களாக இருப்பதாக தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழந்த காங்கிரஸ், உத்தரவாதம் என்ற பெயரில் பொய்கூறி வருவதாகவும் அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com