மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம்.....!!

மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம்.....!!

தேவைப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.  

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ரெட் சாலை  டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.  அப்போது பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தன்னை நேசிப்பதாகவும்,  100 நாள் வேலை நிறுத்தப்பட்ட மக்களுக்காக தான் போராடுவதாகவும் குறிப்பிட்டார்.  

மேலும் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அதற்கு முடிவுகட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  மேலும் 100 நாள் வேலை நிறுத்தப்பட்ட மக்களுக்கான நியாயம் கிடைக்கவில்லையெனில் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் கூறியுள்ளார் மமதா பானர்ஜி.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com