நாளை முதல்.... படித்த இளைஞர்களுக்கு ரூ.2500!!!

நாளை முதல்.... படித்த இளைஞர்களுக்கு ரூ.2500!!!

சத்தீஸ்கரில் படித்த இளைஞர்களுக்கு நாளை முதல் மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுமென்று அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக இளைஞர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.  இதனால் பல மாநிலங்களிலும் வேலையில்லாமல் திண்டாடி வரும் இளைஞர்களுக்காக பல புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கரில் நாளைத்தொட்டு படித்த இளைஞர்களுக்கு வேலையின்மை உதவித்தொகையாக  2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com