வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி - தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி - தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக  மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

இதனை தொடர்ந்து அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இதற்கான பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.


ஆன்லைன் வசதி

ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் மூலமும், மையங்கள் மூலமும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் உடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.


58% வாக்காளர்கள்

இந்த நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதுவரை மூன்று கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன்  ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஒட்டுமொத்த வாக்காளர்களில் 58% வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com