"ஜனநாயகத் தாயின் திருவிழா மக்களவைத் தேர்தல் " - பிரதமர் மோடி

"ஜனநாயகத் தாயின் திருவிழா மக்களவைத் தேர்தல் " - பிரதமர் மோடி

கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத் தாயின் திருவிழா” என மக்களவைத் தேர்தலைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஜி20 சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். 

அப்போது அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து இணக்கமான சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல், சுற்றுலாத்துறைக்கு உள்ளது என அவர் தெரிவித்தார். 

கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத் தாயின் திருவிழா, அடுத்த ஆண்டு கோலாகலமாக நடைபெறவுள்ளது என மக்களவைத் தேர்தலைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மேலும், நிலையான வளர்ச்சியை நோக்கிய சுற்றுலாத்துறையின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைக் கண்டு வியப்பதாகவும், பயங்கரவாதம் நாட்டைப் பிரிக்கும் வேளையில் சுற்றுலாத்துறை அனைவரையும் ஒன்றிணைப்பதாகவும் அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com