இனி இ.பி.கோ இல்லை... भा.न्या.स.!

இனி இ.பி.கோ இல்லை... भा.न्या.स.!

முப்பெரும் குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றியமைக்கும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவின் முப்பெரும் குற்றவியல் சட்டங்களான இந்தியத் தண்டனை சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியியல் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தியில் மாற்றியமைத்து சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று குற்றவியல் சட்டதங்களின் பெயர்களை மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

இம்மசோதாவின் படி இந்தியத் தண்டனை சட்டத்தை பாரத் நியாய சன்ஹிதா எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பாரத் நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா எனவும், இந்தியச் சாட்சிகள் சட்டத்தை பாரத் சாக்‌ஷ்யா எனவும் பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேறியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com