ஒடிசா ரெயில் விபத்து; 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஒடிசா ரெயில் விபத்து; 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் கடந்த 2-ந்தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரயில் போக்குவரத்து துறையின் அலட்சியத்தால்தான் இவ்விபத்து நிகழ்ந்தது என்றும் இதற்கு பொறுப்பேற்று மத்திய இரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இரயில் விபத்து சதி வேலையாக இருக்கலாம் எனவும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தென்கிழக்கு வட்ட ரயில்வே அதிரிகாரி தலைமையிலான குழுவினர் இரயில் விபத்து தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் சிபிஐ விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக  முதற்கட்டமாக 7 பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com