தேர்தல் நெருங்கும் தெலங்கானாவில் இன்று பிரதமர் உரை...!

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் தெலங்கானாவில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். 

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் BRS கட்சியானது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. 

தொடர்ந்து பாஜக சார்பில் பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் இன்று தெலங்கானா செல்லும் பிரதமர் மோடி, மெகபூப்நகர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 

இதைத்தொடர்ந்து நாக்பூர் - விஜயவாடா சாலைத்திட்டம், ஜக்லெய்ர் - கிருஷ்ணா புதிய ரயில் சேவைத் திட்டம் உள்ளிட்டவையும் தொடங்கி வைக்கப்படவுள்ளன. தொடர்ந்து பல்வேறு ரயில்சேவைகளை காணொலி வாயிலாகத் திறந்துவைத்து, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.

ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் 5 புதிய கட்டிடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது வாகனத்தில் சென்று மக்களை சந்தித்து, தொடர்ந்து மக்களிடம் உரையாற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com