உலக மகள்கள் தினத்தில் வாழ்த்துகளை பகிர்ந்து மகள்களே பெருமை கொள்ளுங்கள்!!!

உலக மகள்கள் தினத்தில் வாழ்த்துகளை பகிர்ந்து  மகள்களே பெருமை கொள்ளுங்கள்!!!

மகள்கள் வீட்டின் கொண்டாட்டம். மகள்கள் குடும்பத்தின் பெருமை . வீட்டின் அழகை அதிகரிக்கும் ரங்கோலிகள். ஆனால் சமுதாயத்தில் மகன்கள் அல்லது ஆண்களை விட மகள்கள் தாழ்ந்தவர்களாகவேக் கருதப்படுகிறார்கள்.

மரபுவழிக் கருத்துக்கள் கொண்டவர்கள் மகள்கள் வேறு வீட்டிற்கு செல்பவர்களாகவும், மகன்களே குடும்பத்தை நடத்துவார்கள் எனவும் மகன்களுக்கே குடும்பப் பொறுப்பு உள்ளது எனவும் நம்புகிறார்கள்.  இந்த காரணத்திற்காக மகள் மற்றும் மகன்களில் மகன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இந்தியாவில், பெண்கள் திருமண செலவும் அதிகமாக இருப்பதால் பெண் குழந்தைகளின் மீது ஆசை இல்லாததால், கருக்கொலை சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது.   இத்தகைய சூழ்நிலையில், மகள்களை காப்பாற்ற, அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் மகள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச மகள்கள் தினம் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக மகள்கள் தினம் இந்த ஆண்டு செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. மகள்கள் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புங்கள், இதன் மூலம் அவள் ஒரு மகளாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com