இந்திய இராணுவம் இலங்கை செல்கிறதா? சுப்ரமணிய சுவாமி சொன்ன தகவல்!

இந்திய இராணுவம் இலங்கை செல்கிறதா? சுப்ரமணிய சுவாமி சொன்ன தகவல்!

கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சே சகோதரர்களுக்கு தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

டிவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும், கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்ச இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்வானவர்கள். அவ்வாறு இருக்க அவர்களின் ஆட்சியை எவ்வாறு ஒரு கும்பலால் கவிழ்க்க முடியும். அப்படி நடக்குமானால் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

எனவே ராஜபக்சே சகோதரர்களுக்கு தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணிய சுவாமி ராஜபக்சே சகோதரர்களின் நீண்ட நாள் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com