கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு - பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு - பிரியங்கா காந்தி கடும் கண்டனம்
Published on: 
Updated on: 
1 min read

பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியாவிட்டால் அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும் என, கர்நாடகா சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ரமேஷ் குமார் கூறியிருந்தார். 

இந்த மோசமான கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவருக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்  அவர் , இப்படியான வார்த்தைகளை ஒருவரால் எப்படிப் பேச முடிந்தது என்பதே விவரிக்க இயலாதது என்றும், அந்தப் பேச்சுக்கு அவரை யாரும் பாதுகாக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை ஒரு கொடுங்குற்றம் எனவும் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com