உலகின் முதல் இயற்கை எரிவாயுவில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

உலகின் முதல் இயற்கை எரிவாயுவில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

உலகின் முதல் இயற்கை எரிவாயுவில் இயங்கும் மோட்டார் சைக்கிளை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. ஃப்ரீடம்-125 என்று பெயரிடப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளை, இந்தியாவைச் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ உற்பத்தியாளர் வடிவமைத்து வெற்றிகண்டுள்ளனர். இதனையடுத்து மகாராஷ்டிராவில் புனேவில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் இந்த மோட்டா ர்சைக்கிளை இந்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிபினே வெளியிட்டு துவக்கிவைத்தார். அப்போது பேசிய அவர் இந்த வகை வாகனங்களால். சுற்றுச்சூழலை மாசுபாடுவது குறைக்கப்படும் என்றும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலை விட சிஎன்ஜி மலிவானது என்பதால் ஃப்ரீடம்-125 செலவு குறைந்ததாக இருக்கும் என்று கட்கரி கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com