மம்தா சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது...!காரணம் என்ன?

மம்தா சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது...!காரணம் என்ன?

Published on

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. 

மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தல்களுக்கான பிரச்சாரப் பணியில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக க்ரிந்தியில் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் பாக்தோரோ புறப்பட்டு சென்றார் மம்தா.

பயணத்தின் இடையே திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, செவோக் விமானநிலையத்தில் மம்தா சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மம்தா பானர்ஜி நலமுடன் உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com