தேனிலவுக்கு செல்லாமல் முதலில் கல்லறைக்கு பயணம் செய்த மணமக்கள்....வைரலாகும் புகைப்படம்...

முன்களப் பணியாளராக மாறிய புது தம்பதிகள்...குவியும் பாராட்டு
தேனிலவுக்கு செல்லாமல் முதலில் கல்லறைக்கு பயணம் செய்த மணமக்கள்....வைரலாகும் புகைப்படம்...
Published on
Updated on
1 min read

மலேசியாவில் திருமணமான மறுநாளே தேனிலவுக்கு செல்லாமல் கல்லறையில் தகனம் செய்யும் மணமக்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பொதுவாக திருமணம் என்பது அனைவருக்கும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணமாக அமையும். ஆனால், அப்படிபட்ட தருணத்தை மாற்றி அமைக்கும் விதமாக மலேசியாவை சேர்ந்த மணமக்கள் திருமணமான மறுநாளே கல்லறைக்கு சென்று முன்களப் பணியாளராக மாறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த முஹம்மது ரிட்ஜீவன், நூர் அஃபிஃபா ஹபீப்-பை டிசம்பர் 13-ம் தேதியன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், இருவரும் திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்குச் செல்வதற்கு பதிலாக, கணவனும் மனைவியும் முன்களப் பணியாளராக மாற முடிவு செய்தனர்.

மணமகன் ரிட்ஜீவன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காங்குல்-கி குழுவில் உறுப்பினராக உள்ளார். 

திருமணம் முடிந்த அடுத்த நாளே, கொரோனா நோயாளி இறந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று குழுவிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ரிட்ஜீவன் தனது மனைவியிடம் கூறினார். அதன் பிறகு அவரும் கணவருடன் செல்ல ஒப்புக்கொண்டார். 

தம்பதியினர் உடனடியாக கல்லறைக்குச் சென்றனர், அங்கு அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடல்களை தகனம் செய்தனர்.

ரித்ஜீவன் அங்கம் வகிக்கும் குழுவில், சமூக சேவைக்காக அதனுடன் இணைந்த இவர்கள் வேறு இடங்களில் பணிபுரிந்தாலும், சமூக சேவைக்காக இந்த குழுவிற்கு உதவுகிறார்கள்.

அதே நேரத்தில், இந்த குழுவுக்கான தங்கள் பணி இப்போதைக்கு நிற்கப் போவதில்லை என்று தம்பதியினர் தெரிவித்தனர். 

திருமணமான மறுநாளே கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை செய்ய முடிவு செய்து, இதுவரை 15 உடல்களை எரித்துள்ளனர். 

மேலும், தேனிலவுக்குப் பதிலாக கல்லறையில் கழிக்கும் மணமக்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com