குறுக்கு வழி அரசியல் வேண்டாம் : நிலையான வளர்ச்சிதான் தேவை

நாட்டின் வளர்ச்சி, குறுக்கு வழி அரசியல் மூலம் வந்து விடாது. நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம். நிலையான வளர்ச்சிதான் தேவை என்று பேசினார்.
குறுக்கு வழி அரசியல் வேண்டாம் : நிலையான வளர்ச்சிதான் தேவை

மகாராஷ்டிரம் நாக்பூர் 

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிசம்பர் 11) துவங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சி, குறுக்கு வழி அரசியல் மூலம் வந்து விடாது. நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம். நிலையான வளர்ச்சிதான் தேவை என்று பேசினார்.

பாஜகவின் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ் ஸின் தலைமையிடம் அமைந்திருக்கும் நாக்பூரில்,கர்நாடகாவில வெற்றி வேணுமா? வேண்டாமா? என்ன சொல்ல வர்றார் காங்கிரஸ் தலைவர்

மேலும் படிக்க : 

நலத்திட்டங்கள் 

1)ரூ.1,575 கோடியில் அனைத்து வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

2)நாக்பூரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.8,650 கோடியில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

3)நாக்பூர் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.6,700 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

நாக்பூரையும், ஷீரடியையும் இணைக்கும் வகையில் 701 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 520 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நாட்டின் 6ஆவது வந்தே பாரத்எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாக்பூரில் இருந்து சத்தீஸ்கரின் பிலாஸ்பூருக்கு இயக்கப்படுகிறது.

இவை உட்பட ரூ.75,000 கோடியிலான திட்டங்களை பிரதமர் மோடி நாக்பூரில் நேற்று தொடங்கிவைத்து உரையாற்றினார்.

குறுக்கு வழி அரசியல் 

அப்போது அவர், “நாட்டின் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்திருக்கும் குறுக்கு வழி அரசியல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். சில கட்சிகள் குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்கின்றன. ஆட்சிக்கு வருவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க நினைக்கின்றன.குறுக்குவழி அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் அரசியல் தலைவர்கள், நாட்டின் மிகப் பெரிய எதிரிகள். மக்களின் வரிப் பணம் ஊழல்கள் மூலம் சூறையாடப்பட்டதால், நாட்டின் வளர்ச்சி தடைபட்டது. குறுக்குவழி அரசியல் நாட்டை அழிக்கும். மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு இந்த அவல நிலை மாற்றப்பட்டது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com