
ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தாலிபான் தீவிரவாதிகள் அங்கு புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக பேசியுள்ள தாலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான வாஹிதுல்லா ஹாஷ்மி, ஆப்கான் முன்னாள் விமானிகள், ராணுவ வீரர்களை மீண்டும் படையில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
தாலிபான்களின் ஆட்சி மன்ற குழு தலைவர் ஹிமத்துல்லா ஹகும்சலா தலைமையில் ஆட்சி நடைபெறும் என்றும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள யாரேனும் அதிபராக பதவி ஏற்பார்கள் எனவும் ஹாஷ்மி கூறியுள்ளார். ஆப்கானில் இனி ஜனநாயகத்திற்கு இடமில்லை என்றும் ஷரியத் சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.