
சீனா நினைத்ததை விட அதிவேகமாக அணு ஆயுதங்களை குவித்து வருவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், சீனா அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக உயர்த்த கூடும் என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 2030ல் அந்நாட்டின் கைவசம் ஆயிரம் அணு ஆயுதங்கள் இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த அணு ஆயுத குவிப்பானது, அமெரிக்கா எதிர்பார்த்ததை விட இரண்டரை மடங்கு வேகமாக நடப்பதாகவும் கூறியுள்ளது.