
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியர்களின் சுதந்திரக் கனவு பல தலைமுறையைச் சேர்ந்த வீரர்களின் போராட்டத்தால் நனவானதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த வீரர்களின் தியாகத்துக்கு தான் தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
75 ஆண்டுகாலப் பயணத்தில் நாம் திரும்பிப் பார்த்து பெருமைப்படக் கூடிய எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தவறான பாதையில் வேகமாகச் செல்வதை விட சரியான பாதையில் மெதுவாகவும் நிதானமாகவும் செல்வது சிறந்தது என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை இந்தியா பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வசித்தாலும் இந்தியா வலுவான ஜனநாயக நாடாக உள்ளதை உலகமே ஆச்சர்யத்துடன் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.