ஃபிஜியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனை திறப்பது உள்ளிட்ட 12 அம்சத் திட்டங்களை பப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான 3வது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்டார்.
பப்புவா நியூ கினியா சென்றடைந்த பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற மாநாட்டில் உரை நிகழ்த்தினார். பசிபிக் தீவு நாடுகளுடன் இந்தியாவின் கூட்டாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 12 அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.
அதன்படி, பிஜியில் 100 படுக்கைகள் கொண்ட பிராந்திய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு, பப்புவா நியூ கினியாவில் பிராந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி மையத்தை அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அரசுக் கட்டிடங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம், 24 நேர அரசு சேவை மையம், தூய்மையான குடிநீர் வழங்கும் யூனிட்டுகள், யோகா மையங்கள் அமைத்தல் உள்ளிட்டவையும் அதில் தெரிவிக்கப்பட்டன.
முன்னதாக பிரதமர் மோடிக்கு பலாவ் குடியரசின் குடியரசுத்தலைவர் எபாகல் விருது வழங்கி கவுரவித்தார். இதேபோல் உலகளாவிய தலைமையை அங்கீகரிப்பதற்கு துணை நிற்போம் என, ஃபிஜி தரப்பில் பிரதமர் மோடிக்கு உயரிய கவுரவம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, இது தனக்குக் கிடைத்த கவுரவம் அல்ல, இந்திய மக்கள் 140 கோடி பேருக்குக் கிடைத்த கவுரவம் எனக் குறிப்பிட்டார்.