உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி...

உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி...

தன்னை பாதுகாத்து நன்முறையில் வழி அனுப்பிய பஞ்சாப் முதல்வருக்கு பிரதமர் நன்றி தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

பாஞ்சாப் மாநிலத்தில் பெராஸ்பூர் என்ற இடத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று 42750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகப்டர் மூலமாக செல்ல இருந்ததாக கூறப்பட்ட நிலையில் மோசமான வானிலை காரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் சாலை வழியாக செல்ல திட்டமிட்டதாகவும் சொல்லப்பட்டது.ஆனால் போரட்டம் காரணமாக சாலைகள் மறைக்கப்பட்ட நிலையில் மோடி சென்ற வாகனம் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.20 நிமிடங்களாக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்பிற்காக உரிய பாதுகாப்புகள் செய்யப்பட்டிருந்த நிலையில் குளறுபடிகள் தொடங்கியது தொடர்ந்து பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியினை ரத்து செய்தனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் பதிண்டா விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக சென்றுள்ளார்.மேலும் பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமரின் நிகழ்ச்சி ரத்தானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுகுறித்து எழுந்த விசாரணையின் போது பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்தது எவ்வாறு என்பதனை கவனத்தில் எடுத்துள்ளதாகவும் இவ்விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் கேள்விகள் எழுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பஞ்சாபில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி பஞ்சாப் பயணம் மேற்கொண்டு  இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. 

இந்த நிலையில் தன்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.“விமான நிலையத்திற்கு நான் உயிருடன் திரும்பி இருக்கிறேன். அதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள்” பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்து உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com