
இலங்கையில் வரும் 2024ஆம் ஆண்டு வரை உணவுப் பற்றாக்குறை நீடிக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இலங்கை அரசுதான் காரணம் என்றும், அதேநேரத்தில் உக்ரைன் போர் அதனை கூடுதலாக வலுப்படுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.
சீனாவிடம் இருந்து மேலும் நிதி உதவிகளை ஏற்கவும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவும், இலங்கை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அதேநேரம் தேவையான எரிபொருளை கொள்முதல் செய்ய முதலில் வேறு வழிகள் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது