தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்கவில்லை...

பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், 22 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியை குறைத்துள்ளன. 14 மாநிலங்கள் மட்டும் வாட் வரியை குறைக்கவில்லை.
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள்  பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்கவில்லை...

பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாய் என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாய் என்ற அளவிலும், மத்திய அரசு குறைத்தது. இதனால் இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது. கலால் வரியை குறைத்த மத்திய அரசு, மக்கள் மேலும் பயனடையும் வகையில், மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்படி கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம் உள்பட 24 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. 

தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், மேகாலயா, அந்தமான், ஜார்கண்ட், ஒடிசா, சட்டீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 14 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. இதில், பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி குறைப்பு இல்லை என, ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதைப்போல பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மறுப்பு தெரிவித்துள்ள கேரள அரசு, ஏற்கனவே நிதிநிலைமை மோசமாக இருப்பதால், வரியை குறைத்தால் நிவாரண பணிகள் பாதிக்கப்படும் என கூறியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com