
2014, ஜனவரி 17-ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சுனந்தா புஷ்கரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவரது கணவா் சசி தரூா் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் விசாரித்து வருகிறார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சுனந்தா புஷ்கர் மரண வழக்கு விசாரணையிலிருந்து சசி தரூரை விடுவிப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவைக் கேட்ட சசி தரூர், நீதிபதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, இந்த விவகாரம் கடந்த ஏழரை ஆண்டுகளாக தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது அதிலிருந்து தனக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்திருப்பதாகவும் கூறினார்.