இங்கிலாந்தில் நடந்த ஜி 7 உச்சி மாநாடு ஞாயிற்று கிழமை நிறைவடைந்த நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோபிடனுக்கு விண்ட்சர் நகரில் வைத்து ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இங்கிலாந்தின் ராணுவ மரியாதையை பெறும் 4வது அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பைடன் பெற்றார்.இதற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப், பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ்ற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பைடனிடன் பேசிய எலிசபெத் ராணி சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர் புதினை பற்றிய கேட்டதாக பைடன் கூறினார்.
மேலும் எலிசபெத் ராணி தனது தாயை நினைப்வூட்டியதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.தொற்றுக்கு காரணமானதாக கூறப்படும் சீனா மீது அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பைடனிடம் ராணி வலியுறுத்தினார்.